Thu. Jan 15th, 2026

சரியும் கம்பங்கள்… சாலையில் அரசு கேபிள் வயர்… பயத்தில் மக்களும் வாகன ஓட்டுனர்களும்

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம்  மூலமாக மக்களுக்கு இணைய வசதி வழங்குவதற்காக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் மின்வாரிய மின் கம்பங்கள் மூலமாகவும், மின்கம்பங்கள் இல்லாத இடத்தில் கம்பங்கள் நடப்பட்டு கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கம்பங்கள் அமைக்கும்பணி நடைபெற்ற சில தினங்களில் கம்பங்கள் சாய தொடங்கின. கேபிள் வயர்களும் சாய்ந்து சாலையின் நடுவில் குறுக்கே பல இடங்களில் கீழே கிடப்பதனால் வாகன ஓட்டுனர்களும் பொதுமக்களும் அச்சத்துடனே சாலையை  கடக்கின்றனர்.

பேய்க்குளம், கலுங்குவிளை சாலையிலும், பேய்க்குளத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில்  இளமால்குளம், செட்டிகுளம் ஆகிய ஊர்களில் சாலையில் கேபிள் வயர்கள் கிடப்பதனால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களும் சாலையைக் கடக்க  பயத்தில் உள்ளனர்.

பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும்  சாலையில் கிடைக்கும் கேபில் வயர்களை அகற்றவும், கம்பங்களை சரியாக நடவும் கோரிக்கை எடுத்துள்ளனர்

Related Post