ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆறாம்பண்ணை மக்கள் நலச்சங்கத்தின் 7ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் ஆறாம்பண்ணையிலுள்ள பண்ணை மஹாலில் நடந்தது.
மருத்துவ முகாமிற்கு, மக்கள் நலச்சங்க தலைவர் ஹனிபா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் அப்துல் ரஷாக், பொருளாளர் இஸ்மாயில், துணைத் தலைவர் அப்துல்சமது, துணை செயலாளர் உதுமான் அலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் இஷாக் அனைவரையும் வரவேற்றார்.
இலவச பொது மருத்துவ முகாமில், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹிர் அஹமது, தேர்தல் துணை தாசில்தார் லோகநாதன், கருங்குளம் யூனியன் பி.டி.ஓ., ராஜா ஆறுமுகநயினார், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து முகாமின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.
மகளிர் மருத்துவம், பொதுமருத்துவம், சித்த மருத்துவம், எலும்பு மருத்துவம், இதய மருத்துவம் என அனைத்து வகையான மருத்துவத்துறை சார்ந்த டாக்டர்கள் செல்வகுமார், ஆபிதா பர்வீன், ஆதில் அஹமதுயாமீன், நவாஸ் ஷெரீப், ஷஹானா பர்வீன், அயுஅய்யூப் அன்சாரி, அமலன், முஹம்மதுரியாத் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையான மருந்துகளை மக்கள் நலச்சங்கம் மூலமாக இலவசமாகவே வழங்கினர்.

மருத்துவ முகாமில், ஆறாம்பண்ணை, அராபத்நகர், நடுவக்குறிச்சி, மணக்கரை, கொங்கராயக்குறிச்சி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று பெரிதும் பயன் அடைந்தனர்.
முகாமில், பள்ளிவாசல் தலைவர்கள் அபுசாலி, அன்வர், முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் பொருளாளர் ”சத்யா” அக்பர், தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல்காதர், வி.ஏ.ஓ., முத்துலெட்சுமி, முன்னாள் பஞ்.,தலைவர் சாகுல்ஹமீது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மைமூன் அப்துல்கரீம், மெஹபூப்அலி, சங்க நிர்வாகிகள் உமர்கத்தாய், இல்லியாஸ், காஜாமுகைதீன், அப்துல் வாஹித், இசாக், ஆரிப், ரிஸ்வான், ரியாஸ், திவான், அமின், பாயிஸ், காஜாமுகைதீன், யூசுப், அயுல்காசிம், ஹாஜிமுஹம்மது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
7ம்ஆண்டு தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மக்கள் நலச்சங்க தலைவர் ஹனிபா, செயலாளர் அப்துல் ரஷாக், பொருளாளர் இஸ்மாயில் தலைமையில் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

