பேய்க்குளம் அருகே உள்ள தேர்க்கன்குளம் தெற்கு தெருவை சேர்ந்த கோசலாவ நாடார் மகன் கருப்பசாமி (வயது 60) என்பவர் நேற்று 24.12.2025 மாலை சுமார் 7 மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக தோட்டத்திற்கு சென்று பூச்சி மருந்து அருந்தி இறந்து விட்டார்.
மேற்படி கருப்பசாமிக்கு திருமணம் ஆகி 3 ஆண் 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மேற்படி இறந்த நபரின் உடலை மீட்டு உடல் கூராய்வு செய்வதற்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேற்படி சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
