சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை மரைன் கல்லூரியின் அருகில் 24.12.2025 இரவு 7.15 மணியளவில் போலையார்புரத்தை சேர்ந்த அப்பாத்துரை என்பவரின் மகன் பேன்சிகர் (வயது 58) என்பவர் இடைச்சிவிளையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

பணி முடித்துவிட்டு தனது இருசக்கர வாகன ஸ்பிளெண்டர் பிளஸ் ல் ஊருக்கு செல்லும் வழியில் திசையன்விளை உடன்குடி ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே எதிர்பாராத விதமாக மாடு இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலை, மற்றும் கைகளில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ் மூலம் திசையன்விளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

