Thu. Jan 15th, 2026

மிசோரத்தில் இறந்த நபருக்கு இறப்பு சான்றிதழை பெற்று தந்த தாசில்தார் – ஊர் மக்கள் பாராட்டு

மிசோரத்தில் இறந்த கணவரின் இறப்பு சான்றிதழை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இஸ்ரோ நில எடுப்பு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் வழங்கினாார்.

தூத்துக்குடி மாவட்டம். வெள்ளமடம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (35). லாரி டிரைவரான இவர், கடந்த 25.03.2025 அன்று மிசோரம் மாநிலத்திற்கு லோடு ஏற்றி கனரக வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது லுமலி என்ற இடத்தில் லாரி வந்தபோது குமாரசாமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து போனார்.

வேறு மாநிலத்தில் இறந்ததால் இறப்பினை பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் எடுக்க முடியாமல் அவரது மனைவி முத்துலட்சுமி போராடி வந்தார்

கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க கேட்டு அவரது மனைவி முத்துலெட்சுமி பல இடங்களில் மனு செய்தும், பணம் செலவழித்தும் இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நாசரேத் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி செல்வகுமாரிடம் முத்துலட்சுமி கோரிக்கை விடுத்தார்.

உடனே இது சம்பந்தமாக இஸ்ரோ நில எடுப்பு தாசில்தாராக தற்போது பணியாற்றி வரும் கோபால கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்து பாதிக்கப்பட்ட முத்துலெட்சுமிக்கு, அவரது கணவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துரிதமாக செயல்பட்டு மிசோரம் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் கனகராஜ் ஈஸ்வரனிடம் கோரிக்கை வைத்தார்

டாக்டர் கனகராஜ் ஈஸ்வரன் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

குமாரசாமியின் இறப்பு சான்றிதழை இன்று (24.12.2025) நாசரேத்திற்கு வந்து தாசில்தார் கோபால கிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கினார்.

சான்றிதழை பெற்றுக்கொண்ட முத்துலட்சுமி தாசில்தார்க்கு நன்றி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார் மற்றும் பேரூராட்சி தலைவி நிர்மலா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நாசரேத் பேரூராட்சி மன்ற தலைவர் நிர்மலா ரவி, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார் மற்றும் பேரூராட்சி தலைமை எழுத்தர் ரைமன் நாக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஞான ராஜ் கிறிஸ்டோபர் புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post