பேய்க்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் கீழத் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் முத்து (29) வசித்து வருகிறார்
இவர் தனது இருசக்கர வாகனத்தில் அம்பலச்சேரி சென்று விட்டு வரும்போது சாலை ஓரமாக நடப்பட்டிருந்த மின்கம்பத்தில் பைக் பயங்கரமாக மோதியது
இதில் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்
அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிர் இழந்தார்
தற்போது புதிதாக நடைபெற்று வரும் மின் கம்பங்கள் அனைத்தும் சாலையை ஒட்டி நடப்படுவதனால் அதிக அளவு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகின்றன
சில மாதங்களுக்கு முன்பு சாலை ஓரமாக நடப்பட்டு இருந்த மின்கம்பத்தில் மோதி 22 வயது வாலிபர் பலியானது குறிப்பிடத்தக்கது
இனிவரும் காலங்களில் மின்கம்பங்கள் நடும்போது சாலையை விட்டு வெகு தூரத்தில் மின்கம்பங்களை நட வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
