Thu. Jan 15th, 2026

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவரக்கம் ஜெபராஜன் தலைமை வகித்தார். கல்லூரி குருவானவர் வனிதாராணி ஆபிரகாம் ஆரம்ப ஜெபம் செய்தார். இசிஇ பிரிவு துறைத்தலைவர் ஆக்னஸ் பிரேமா மேரி வேதபாடம் வாசித்தார். கல்லூரி பாடகர் குழுவினர் பாடல்கள் பாடினர்.

சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதியும், திருமண்டல தேர்தல் அதிகாரியுமான ஜான் சந்தோஷம், வாராங்கல் பவானி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

மாணவ_ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
நிகழ்வில் டினட்டா துபாய் துணை மேலாளர் மகேஸ் குகன், செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாத்ராக்தாஸ், திருநெல்வேலி ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுமைலி ஜெபரஞ்சினி, சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஸ்டேன்லி ஜாண்சன் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் 30 க்கும் மேற்பட்ட மாணவ_ மாணவிகளுக்கு புத்தாடைகளும், கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு இனிப்புடன் கிறிஸ்துமஸ் வெகுமதி மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவரக்கம் ஜெபராஜன் தலைமையில் முதல்வர், துறைத் தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655
.

Related Post