Thu. Jan 15th, 2026

நாசரேத் நூலகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

நாசரேத் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாசரேத் நூலக அரங்கில் வைத்து நடைபெற்ற நிகழ்வுக்கு வாசகர் வட்டத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை தாங்கினார். நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார்.

பாரதியாரின் மேன்மை குறித்து கவிஞர் சிவா கவிதை வாசித்தார்.
பாரதியின் சிறப்புகளைப் பற்றி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டக்குழு உறுப்பினரும், அகில இந்திய வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித் தலைவருமான முனைவர் இராதா கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
தத்துவ எழுத்தாளர் மணி மொழிச் செல்வன் எழுதிய நட்பைப் போற்றுவோம் நூலை தாழைமணி திறனாய்வு செய்தார். எழுத்தாளர் மணி மொழிச் செல்வன் ஏற்புரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து பேராசிரியர் காசிராசன், தேரி இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன் கவிஞர் மாரிமுத்து ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இதில் பேராசிரியர் காசிராசன், முனைவர் இராதா கிருஷ்ணன், திறனாய்வாளர் தாழைமணி, எழுத்தாளர் மணிமொழிச்செல்வன், தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன், கவிஞர் சிவா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், தொழிற்சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ், கவிஞர் மூக்குப்பீரி தேவதாசன், டாக்டர் விஜய் ஆனந்த், ஆசிரியர் செல்வன், செல்லப்பாண்டியன், ஜான் பிரிட்டோ, விபின் ஜெயக்குமார் ஆசிரியை சார்லெட், இலக்கியப் பேச்சாளர் சினேகலதா, மனோகரன், மாரிமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்வின், சிவா, ரத்னசிங், கந்தசாமி, மாணிக்கம், அந்தோனிராஜ், மந்திரம் பிரின்ஸ், கிங்ஸ்லி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Post