நாசரேத் பஜாரில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் 55 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பிறப்பித்த உத்தரவின் பேரில் நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் ஆலோசனையின் பேரில் பேரூராட்சிக்குட்பட்ட ஆஸ்பத்திரி ரோடு முதல் கிங் எட்வர்ட் தெரு வரையிலும் உள்ள கடைகளில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் தலைமையில் ஊழியர்கள் பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெளியூரில் உள்ள வியாபாரி ஒருவர் கடைகளுக்கு மொத்தமாக பிளாஸ்டிக் விற்பனை செய்த தகவல் அறிந்த ஊழியர்கள் அங்கே சென்று அவரிடமிருந்த 55 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ததோடு ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

