Thu. Jan 15th, 2026

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்மஸ் கீத ஆராதனை – நீதிபதி ஜான் சந்தோஷம் பங்கேற்பு!

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்மஸ் கீத ஆராதனை நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ஜான் சந்தோஷம் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக திருமறையூர் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர் கிறிஸ்மஸ் சிறப்பு பாடல்களைப் பாடினர். ஆசிரியர் வினோத் பாடகர் குழுவை வழிநடத்தினார்.

நிகழ்ச்சியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் அலுவலருமான ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோசம் கிறிஸ்மஸ் செய்தி வழங்கினார்.

திருமண்டல மேலாளர் காபிரியல் தேவ இரக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளர் முனைவர் ரமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய வர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிறைவாக கல்லூரியின் முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் நன்றியுரை ஆற்றினார. ஆசிரியர் ஜெஸிந் பிரவீன் சிறப்பு பாடல் பாடினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் வெலிங்டன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் மாமல்லன் பெருமன்ற உறுப்பினர்கள் ஆண்ட்ரூஸ், ஸ்டெல்லா சாலமோன், வினோதினி பிரதீப், சுதாகர் சைமன் நாசரேத் பாஸ்டரேட் கமிட்டி உறுப்பினர்கள் லில்லி ஜெபக்குமார், மாணிக்கம் வில்சன், ஜெபக்குமார் சாமுவேல், சாமுவேல், ஜெபின் ஜேம்ஸ், கேபா செல்வன் ஏஞ்சலின் ராஜேஷ், செல்வின் பிரபாகர் மோசஸ், லிவிங்ஸ்டன் பிரதீப் மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார், முத்து சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post