Thu. Jan 15th, 2026

நாசரேத் அருகே பைக் விபத்தில் இருவர் பலி

நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்தவர் அமலி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பவரின் மகன்  அந்தோணி பீட்டர் (23).

இவர் வேலை நிமித்தமாக நாசரேத்தில் இருந்து வி கே சி நகர் சந்திப்பு பகுதியில் இருந்து இருந்து அச்சம்பாடு  சாலையில் திரும்பிய போது பின்னால் வேகமாக வந்த  இருசக்கர வாகனம், அந்தோணி பீட்டர் இருசக்கர வாகனம் நேரடியாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்தோணி பீட்டர் பரிதாபமாக இறந்தார்

மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களான  சாத்தான்குளம் காமராஜ் நகரை சேர்ந்த ஆண்ட்ரோஸ் பிரபு என்பவரின் மகன் நார்மன் ஜோஸ்வா (18), வெங்கட்ராயபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பேச் என்பவரின் மகன் சுடலைமணி (19), சாத்தான்குளம் கொத்துவா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரிபாயுதின் என்பவரின் மகன் பெரோஸ்கான் (18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்

மேற்படி நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்

மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாத்தான்குளம் காமராஜ் நகரை சேர்ந்த ஆண்ட்ரோஸ் பிரபு என்பவரின் மகன் நார்மன் ஜோஸ்வா (18) அவர்களும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 

வாலிபர்கள் இருவர் மரணம் அடைந்தது குறித்து அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை உருவாக்கியது

Related Post