குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும்.
தசரா திருவிழாவானது தற்போது தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி, பேய்க்குளம், சாத்தான்குளத்தில் இருந்து பன்னம்பாறை, வேப்பங்காடு வழியாக குலசைக்கு செல்லும் சாலையானது ஒரு வழிச்சாலையாக உள்ள நிலையில் சாலையின் இருபுறமும் பெரிய பள்ளம் உள்ளது.


மேலும் இச்சாலையில் உடை மரங்கள் சாலையின் பாதி வரை வளர்ந்துள்ள காரணத்தினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேற்படி சாலையில் ஒரு வாகனம் செல்லும் போது எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடாத முடியாத நிலை உள்ளது. இதனால் தசரா திருவிழா காலத்தில் அதிக அளவில் இச்சாலையில் போக்குவரத்து நெருக்கப்படுகிறது.

எனவே பக்தர்களின் வசதிக்காக இச்சாலை இரு வழி சாலையாக மாற்ற வேண்டும் எனவும், சாலையோரமாக உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் எனவும், உடை மரங்களை அகற்றி போக்குவரத்து சீராக செல்ல வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.