
கருத்த பாலம் ( 2 -ம் கேட்-கீதா ஹோட்டல் ரோடு) இடையே இருக்கும் சிறிய பாலம் கடந்த மூன்று மாதங்களாக வேலை நடை பெறுகிறது.
பண்டுகரை சாலை மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் பாலம் வேலை செய்ய ஜல்லியை நடு ரோட்டில் தட்டாமல், ஓடை ஓரமாக ஜல்லி தட்டப்பட்டுள்ளது. குட்டி யானை வாகனத்தில் பிடிக்கின்ற ஜல்லி ஓடையில் தட்டப்பட்டுள்ளது.
இதனால் சாக்கடை தண்ணீர் போக முடியாமல் அடைப்பதுடன், சாமானிய மக்களின் வரிபணத்தில் வாங்கிய பொருட்களும் வீண்ணாக்க படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மு. சிவசங்கர்
நிருபர்
புன்னகை தேசம்
தூத்துக்குடி

