
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட அம்பலச்சேரி ஊரில் சாலையின் நடுவில் 3 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்படி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு உடனடியாக சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் மேற்படி சாலையில் உள்ள பாலமானது கடந்த சில மாதங்களாகவே சேதம் அடைந்துள்ளது. மேற்படி பாலத்தை சீரமைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் பாலம் சீரமைக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள்நெடுஞ்சாலைத் துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே உடனடியாக விபத்து ஏற்படுவதற்கு முன்பு பாலத்தையும் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.