Thu. Jan 15th, 2026

ஆணைவாரி மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குழுழூர் அருகே ஆணைவாரி ஓடையின் குறுக்கே மேம்பால பணி ஒன்றரை வருடமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

பாலம் வேலை நடைபெறும் இடத்தில்  எச்சரிக்கை பலகை, அறிவிப்பு பலகை  இல்லாமல் பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் இரவு நேரத்தில் விபத்து நடைபெறும் அபாயம் உள்ளது.

மேற்படி சாலை வழியாக இயங்கி வந்த பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களும் மாணவ மாணவியர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிகின்றனர்

எனவே உடனடியாக ஆணைவாரி மேம்பாலத்தினை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவும், மேற்படி வழித்தடத்தில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கொ. மணிமொழியன்
குழுழூர், அரியலூர் மாவட்டம்

Related Post