Thu. Jan 15th, 2026

இட்டமொழி மன்னார்புரம் இடையே விபத்து ஏற்படுத்தும் சாலை – சரி செய்ய கோரிக்கை

திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் இருந்து வள்ளியூர் நாகர்கோவில்  செல்ல பொதுமக்கள் வாகனங்களில்  இட்டமொழி மன்னார்புரம் சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

மேற்படி சாலையில் இட்டமொழிக்கும் மன்னார்புரத்திற்கும் இடையில் சாலையில் குழி தோண்டி, தற்போது  மூடப்பட்டுள்ளது.

மேற்படி பணியினை சரியாக செய்யாமல் கடமைக்காக செய்துள்ள காரணத்தினால் மேற்படி இடத்தில் சாலை மேடு பள்ளமாக உள்ளது

மேற்படி சாலையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில் சாலை மேடு பள்ளமாக உள்ள காரணத்தினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே உடனடியாக மேற்படி சாலையை சீரமைக்க வேண்டுமெனபொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post