தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மீரான்குளம் ஊராட்சியில் பெருமாள்குளம் மீரான்குளம் யூனியன் சாலையின் நடுவில் பெருமாள்குளம் குளம் அமைந்துள்ளது. மேற்படி குளத்தின் நடுவில் பாலம் உள்ளது. மேற்படி பாலமானது பழுடைந்து பல நாட்களாகியும் பழுது பார்க்கப்படாத காரணத்தினால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேற்படி பாலம் வழியாக பெருமாள்குளம் ஊர் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் விவசாயிகள் விவசாய நிலத்திற்கு செல்லவும் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது பாலம் பழுதடைந்துள்ளதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் விவசாய நிலத்தில் உள்ள பயிர் அறுவடை காலம் என்பதினால் ட்ராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம், லாரி போன்றவை செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
உடனடியாக பாலத்தினை சரி செய்ய வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

