திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த சில நாள்களாக திருச்செந்தூர் பாரதியார் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் மேல்புறம் உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாக்கடையில் கலந்து வீணாகிறது.
தண்ணீரை சேமிக்க வேண்டிய காலத்தில், பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய தண்ணீர் ஆனது வீணாகி சாக்கடையில் கலப்பதை கண்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறையினர் குழாய் அடைப்பினை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

