Mon. Aug 25th, 2025

புன்னகை தேசம் செய்தி எதிரொலி – மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்ட மருத்துவர் சாலைப்புதூர் சுகாதார நிலைய பணிக்கு திரும்பினார் – அதிரடி நடவடிக்கை எடுத்த சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் யாழினி

தூத்துக்குடி மாவட்டம் சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புறக்கணிப்படுவதாகவும், மருத்துவர்கள் பணி நேரத்தில் பணியில் இல்லாமல் இருப்பது குறித்தும் 27.06.2025 அன்று நமது புன்னகை தேசத்தில் செய்தி வெளியிடப்பட்டது

நமது செய்தியின் உண்மை தன்மையினை அறிந்த தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் யாழினி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்ட மருத்துவர் வெண்முகில் அவர்களின் மீண்டும் சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்ய உத்தரவிட்டார்கள்.

உத்தரவின் பேரில் இன்று (30.06.2025) காலை மருத்துவர் வெண்முகில் அவர்கள் சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

தற்போது சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரு மருத்துவர்கள் பணியில் உள்ள காரணத்தினால் நோயாளிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்

உடனடியாக நடவடிக்கை எடுத்து மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்ட மருத்துவரை மீண்டும் காலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவராக நியமித்த தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் யாழினி அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளையும் பொதுமக்கள் தெரிவித்தனர்

மருத்துவர் நியமிக்க காரணமாக செய்தி வெளியிட்டு இருந்த புன்னகை தேசம் பத்திரிக்கைக்கும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

முந்தைய செய்தியை படிக்க https://punnagaidesam.com/?p=2307

Related Post