Mon. Aug 25th, 2025

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பசுமை கருத்தரங்கு

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பசுமை மற்றும் இயற்கை மன்றத்தின் சார்பாக பசுமை குறித்த கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் செல்வராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். பேராசிரியை எஸ்தர் இசபெல்லா வரவேற்றார்.

முதல்வர் ஜிவி எஸ்தர் ரத்தினகுமாரி கருத்தரங்கு குறித்ததான நோக்கத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும்,தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இணை இயக்குனர் ஜான் சாமுவேல் இளைஞர்கள் இயற்கையை பாதுகாப்பது குறித்தும், அழிவின் விளிம்பில் இருக்கும் உலகை தொய்வின்றி பாதுகாக்க வேண்டும் எனவும் மாணவ_ மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

இதில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.பேராசிரியை நித்தியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் பேபி ஷாலினி நன்றி கூறினார்.இயற்கையை பாதுகாக்க முனைப்புடன் செயல்படுவோம் என்ற உறுதிமொழியை எடுத்தனர்.

ஏற்பாடுகளை கல்லூரி செயலர் நீதிபதி ஜான் சந்தோஷம், முதல்வர் ஜீவி எஸ்தர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post