spot_img
9.4 C
New York
Friday, November 13, 2026

Buy now

spot_img

முதலூரில் வெட்டு சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த கணவரும் பலி

தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த வாரம் நடந்த பெண் கொலை வழக்கில், படுகாயமடைந்து 6 நாட்களாக சிகிச்சையில் இருந்துவந்த அவரது கணவர் உயிரிழப்பு – எதிரி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (51) என்பவரது குடும்பத்தினருக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானபிரகாஷ் (23) என்பவருக்கும் இடையே, முத்துக்கிருஷ்ணனின் 15 வயது மகளுடன் ஞானபிரகாஷ் கொண்டிருந்த காதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில், கடந்த 22.10.2026 இரவு முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ், அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு முத்துக் கிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா (40) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது 12 வயது மகன் ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28.10.2026) இரவு முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபரான ஞானபிரகாஷ் சம்வம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், மேலும் அவர்மீது தட்டார்மடம் காவல் நிலைய போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்