spot_img
9.4 C
New York
Friday, November 13, 2026

Buy now

spot_img

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி – பேரணி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி மற்றும் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரான நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தரை, பள்ளித் தலைமையாசிரியர் ஜெபசிங் கால்டுவெல் வரவேற்றார்.

காவல் ஆய்வாளர் வனசுந்தர், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கினார். பின்னர் ஓவியப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி, நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. அருகில் இருந்து புறப்பட்டு, வாரச் சந்தை, கைத்தொழில் பாடசாலை, லூக்கா மருத்துவமனை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பேரணியில் மாணவர்கள் பங்கேற்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் சுதாகர், தலைமையாசிரியர் ஜெபசிங் கால்டுவெல், உதவித் தலைமையாசிரியர்கள் மெரிட்டன் சகரிராஜ், நேசகுமார், பாரத சாரணர் இயக்க அலுவலர் ஆபிரகாம் இம்மானுவேல், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், சாலைப் பாதுகாப்பு ரோந்துப் படை அலுவலர் எட்வின், போதை ஒழிப்பு மன்ற அலுவலர் ஸ்டாலின் ஜோனா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்