சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை கிராமம், தெற்கு பன்னம்பாறை முகவரியில் வசித்து வந்த ஆழ்வார் என்பவரின் மகன் ஆறுமுகம் ( வயது -37) என்பவருக்கும் , அதே தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் கொம்பையா ( வயது-64) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு ஏற்பட்டதில் ஆறுமுகம் என்பவர் கொம்பையா என்பவரை கீழே தள்ளி தலையில் கல்லால் தாக்கியுள்ளார்.
கொம்பையா என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த நபரின் உடலானது சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இறந்த நபருக்கு திருமணமான 2 பெண்,1 ஆண் மக்கள் உள்ளனர்.


