spot_img
12.2 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

கன்னியாகுமரி பத்மநாபபுரம் நீதிமன்ற வாயில் முன்பு பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பெண்ணை நீதிமன்ற வாயிலேயே வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற கணவனை வழக்கறிஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி பத்மநாபபுரம் நீதிமன்ற பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்கப்படாத காரணத்தால் பெண்ணை வெட்ட வந்த அவரது கணவர் சாவகாசமாக வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த பெண்ணை வெட்டி கொல்ல முயன்ற கணவரின் வெறிச்செயல். தடுக்க முயன்ற வழக்கறிஞர்களையும் வெட்ட முயன்றதாக அதிர்ச்சி தகவல்

நீதிமன்ற பாதுகாப்புக்கு கூட போலீசார் இல்லாத நிலையில் சாவகாசமாக பெண்ணை வெட்டிச்சென்ற அதிர்ச்சி.

குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குக்காக ஆஜராக வந்த பெண்ணையும் அவருடன் வந்த வழக்கறிஞரையும் வெட்ட வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நீதிமன்ற வாயிலேயே வெட்டுப்பட்ட இளம்பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்