spot_img
13.6 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

மானூர் அருகே 3 கிலோ 850 கிராம் கஞ்சா பறிமுதல் – ஒரு இளஞ்சிறார் உட்பட மூன்று நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் மானூர் அருகே 3 கிலோ 850 கிராம் கஞ்சா பறிமுதல் – ஒரு இளஞ்சிறார் உட்பட மூன்று நபர்கள் கைது.

மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சுப்பையாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த மூவரைச் சோதனை செய்தனர்.

சோதனையில், தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த முகமது சுல்தான் (25), செய்யது அபுதாஹிர் (23) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய மூவரும் அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 3 கிலோ 850 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து மானூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கஞ்சாவைப் பறிமுதல் செய்ததுடன், முகமது சுல்தான் மற்றும் செய்யது அபுதாஹிர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறாரைக் கையகப்படுத்தி, இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின்படி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்