தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மாதாவனம் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை மரக்கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து நாசரேத் போலீசில் கூறப்படுவது நாசரேத் மாதாவனத்தின் பகுதியில் வசித்து வந்த ராமன் என்ற ராபின் என்பவரின் மகன்கள் காபிரியேல் (40) இஸ்ரவேல் (40), சாமுவேல் (38). கூலித் தொழிலாளர்களான இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் மதுபோதையில் இருந்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அண்ணன் இஸ்ரவேல், தம்பி சாமுவேலை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சாமுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பி உயிரிழந்ததை அறியாத இஸ்ரவேல், அதே இடத்தில் மதுபோதையில் தூங்கிவிட்டதாகத் தெரிகிறது. பின்னர் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, சாமுவேல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காபிரியேல் நாசரேத் போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு சாத்தான்குளம் டிஎஸ்பி செல்வராஜ். நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மருத பாண்டியன். நாசரேத் விஇஓ செந்தாமரை. மற்றும்
நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

சாமுவேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் தூத்துக்குடி மாவட்ட தடவியல் நிபுணர்கள். மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இஸ்ரவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



