சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பந்தய வேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 4 பேர் கைது 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே காமராஜர் சிலை பகுதியில், கடந்த 20.10.2026 அன்று அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் இருசக்கர வாகனங்களில் சென்ற 4 நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சாத்தான்குளம் ஞானியார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களான செல்வராஜ் மகன் தமிழரசன் (22), மோகன் மகன் முத்து (19), நடராஜன் மகன் கோகுலகண்ணன் (21) மற்றும் பட்டுராஜ் மகன் தனுஷ் சூர்யா (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.


