spot_img
21.3 C
New York
Monday, October 26, 2026

Buy now

spot_img

குலசேகரப்பட்டினத்தில் கார் கண்ணாடியை உடைத்து கேமராக்கள் திருடிய 4 பேர் கைது

குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து கேமரா மற்றும் அதன் பாகங்களை திருடிய 4 நபர்கள் கைது – திருடப்பட்ட கேமரா மற்றும் லென்ஸ் உட்பட ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு திருவிழாவை வீடியோ எடுப்பதற்காக கடந்த 19.10.2026 அன்று, கோயம்புத்தூரை சேர்ந்த ஜோதிபாஸ்கர் மகன் தரணிதரன் (31) என்பவர் தனது காரில் குலசேகரன்பட்டினம் வந்தவர், குலசை to மணப்பாடு ECR ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் தனது காரை நிறுத்திவிட்டு காரில் கேமரா மற்றும் லென்ஸ் போன்ற பொருட்களை காருக்குள் வைத்துவிட்டு காரைப் பூட்டி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது காரின் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கேமரா மற்றும் லென்ஸ் போன்ற பொருட்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தரணிதரன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், திருச்சியை சேர்ந்தவர்களான அபுதாஹிர் மகன் சித்திக் (43), ராமலிங்கம் மகன் தனபால் (51), கோவிந்த் மகன் விக்கி (எ) நடராஜன் (30) மற்றும் சேகர் மகன் பிரபாகரன் (45) ஆகியோர் தரணிதரன் காரில் இருந்த கேமரா மற்றும் லென்ஸ் போன்றவற்றை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் சித்திக், தனபால், விக்கி (எ) நடராஜன் மற்றும் பிரபாகரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 6,52,000/- மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்