spot_img
13.6 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

வலிப்பு வந்தது போல் நடித்து தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் ஒருவர் பிடிப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர். இதனையடுத்து சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, மறைந்திருந்த கைதிகள் திடீரென காவலர்களை தாக்கிவிட்டு லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 சிறை கைதிகள் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் ஒரு கைதி மட்டும் பிடிபட்டார். இந்தத் தாக்குதலில் ஒரு சிறைக் காவலருக்குத் தலையில் பலத்த காயமும், மேலும் இரு காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தப்பியோடிய சிறைக்கைதிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தேனி முதல் விழுப்புரம் வரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதேபோல தமிழ்நாடு எல்லைகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலைந்யில் தப்பிய 17 கைதிகளில் ஏற்கனவே ஒருவர் பிடிப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்