spot_img
13.6 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

ஓட்டப்பிடாரத்தில் கழிவு மீன் கம்பெனி அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் மூன்று கழிவுமின் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன இரவு நேரத்தில் கழிவுநீர் மீன் கம்பெனி இருந்து வெளியேறும் புகை துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் குடியிருக்க முடியவில்லை என்று கூறி கடந்த ஐந்து வருடங்களாக அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் சங்கரநாராயணன் தலைமையில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கொட்டும் மழையில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொட்டலூரணி கிராமத்தில் கழிவு மீன் கம்பெனிகளால் துர்நாற்றம் வீசுகிறது

அந்த கம்பெனி மூட வேண்டும் மக்கள் அங்கு வாழ முடியவில்லை இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்படுகிறது நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது 6 ஆண்டு காலமாக போராடி வருகிறோம். சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தோம். அந்தக் கழிவு நீர் கம்பெனிகளை மூட வேண்டும் என்று புதிய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

தமிழக அரசு பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பொட்டலூரனி கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளோம். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை அதுபோல சமூக ஆர்வலர் சங்கரநாராயணன் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளது

அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் கடந்த அரசு எங்கள் கோரிக்கை எதுவும் நிறைவேற்றவில்லை தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக  அமைச்சர் மதன் ராஜா நான் செய்தி தருகிறேன் என்று கூறினார். ஆனால் இன்று வரை எதுவும் செய்யவில்லை தீர்வு காண்கிறேன் என்று கூறினார்கள். மாதம் 6 ஆகிவிட்டது. இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

உடனடியாக அமைச்சர் மதன் ராஜாவும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கரநாராயணன் கூறினார்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்