spot_img
12.2 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

அஞ்சுகிராமத்தில் வழக்கறிஞரின் வீட்டை JCB இயந்திரத்தால் இடித்து சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு.

அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சொத்துப் பிரச்சினை காரணமாக வழக்கறிஞரின் வீட்டை JCB இயந்திரத்தால் இடித்து சேதப்படுத்தி, தாக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் காவல் நிலைய திரு. எல்லைக்குட்பட்ட மேட்டுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அய்யப்பன் (45), இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (47) என்பவருக்கும் இடையே அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு இடம் தொடர்பாக சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த பகை காரணமாக, 22.10.2026 அன்று எதிரி ராமச்சந்திரன் அவனது நண்பர்களுடன் சேர்ந்து வழக்கறிஞர் அய்யப்பனை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி அவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியதோடு, அவரை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கியுள்ளனர். அதைத் தடுக்க வந்த அவரது மனைவி சுதா (41) என்பவரை கீழே தள்ளிவிட்டு, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட திரு. அய்யப்பன் அளித்த புகாரின் பேரில், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலில் உட்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்