சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமம், பொன்கமலம் தெருவில் கோபால்சாமி என்பவரின் மகன் முத்து கிருஷ்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2மணி அளவில், மேற்படி நபரின் வீட்டில் வைத்து மர்ம நபர்கள் சிலர் மேற்படி முத்து கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மேரி ரெஜினா மற்றும் மகன் பிளஸ்சன் (வயது -10) ஆகியோரை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மேரி ரெஜினா என்பவர் இறந்து விட்டார்.

முத்து கிருஷ்ணன் மற்றும் அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
மேற்படி சம்பவத்தின் போது முத்து கிருஷ்ணனின் மகள்கள் இருவரையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். மேற்படி மகள்கள் இருவரையும் ஆனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல் வருகிறது
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தட்டார்மடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



