spot_img
11.1 C
New York
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

திசையன்விளை சப்பரபவனி உலக ரட்சகர் திருத்தல சப்பரபவனி

திசையன்விளை சப்பரபவனி உலக ரட்சகர் திருத்தலத்தின் சப்பரபவனி கோலா கோலமாக நடந்தது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உலக ரட்சகர் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் திருவிழாவினை கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜுடு பால்ராஜ் கொடியினை ஏற்றி தொடங்கி வைத்தார். பத்தாம் நாள் திருவிழாவின் சிகர நாளாகும்.

சிகர நாளான இன்று(04.10.2026) காலை 7:00மணி அளவில் தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி பெரு விழாவின் திருப்பலியை நடத்தினார். மாலை 04:00 மணி அளவில் சப்பர பவனியை திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தை அந்தோணி டக்லெஸ் பங்குத் தந்தைகள் ஜேக்சன், அருள் சகாயம் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இன்னிசை வாத்தியங்கள் இசைக்க சிலுவை நாதர் சப்பரம் முன் சென்றது. அதனை தொடர்ந்து மாதா தனி சப்பரத்தில் பவனி வந்தார். மாதா சப்ரத்தை தொடர்ந்து உலக ரட்சகர் இயேசு கிறிஸ்துவின் சப்பரம் பவனி வந்தது.

வழி நெடுகே வழிப்பாட்டிற்காக நின்றிருந்த பக்தர்கள் உப்பும் மிளகும் தூவி நேர்ச்சை கடன்களை நிறைவேற்றியதுடன் மலர் மாலைகளையும் உலக ரட்சகருக்கு அணிவித்து மகிழ்ந்தனர். குழந்தைகளை உலக ரட்சிகர் திருவடிகளில் அர்ப்பணித்து திரும்ப பெற்றனர். விழா மற்றும் சப்பரபவனி ஏற்பாடுகளை பங்கு பேரவை தலைவர் அருள் தந்தை அந்தோணி டக்லஸ், துணைத் தலைவர் அலெக்ஸ் வளனரசு, செயலர் கிங்ஸ்லி, பொருளர் லிவிங்ஸ்டன் ராஜன், அருட் சகோதரிகள், அன்பியங்கள் மற்றும் இறை மக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்