மூக்குப்பீறி – பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையின் 169 வது ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு 7நாட்கள் நடைபெற்ற கூடாரப்பண்டிகை தர்ம காரிய நிகழ்வில் சுமார் 10 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பணம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி_ பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையின் 169 வது ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு கடந்த ஒரு வாரம் கூடாரப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதன் முக்கிய நிகழ்வாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பணம் வழங்கும் தர்ம காரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் நாசரேத் சுற்று வட்டார மக்கள் சுமார் 8 ஆயிரம் பேர் வந்து வாங்கிக் சென்றனர்.
இதைத் தொடர்ந்து சபை ஊழியர்கள், பள்ளி பணியாளர்கள் மற்றும் சபை மக்களுக்கு ஆடைகள் மற்றும் பணம் கொடுக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மூக்குப்பீறி_ பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபை தலைவர் மத்தேயு ஜெபசிங் செயலர் கோயில்ராஜ் பொருளாளர் நவரத்தினம் சபை போதகர்கள் மற்றும் வாலிபர்கள், திருச்சபை மக்கள் செய்திருந்தனர்.


