ஏரல் மற்றும் செய்துங்கநல்லூரில் தவெகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஏரல் காந்தி சிலை முன்பு பட்டாசு வெடித்து தூத்துக்குடி மேற்கு மாவட்ட செயலாளர் அன்னை வி.ஜி.சரவணன் எம்.எல்.ஏ., தலைமையில் தவெகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆழ்வார்விஜய், நகர செயலாளர்கள் ஏரல் ராஜா, சாயர்புரம் சரவணன், ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர துணை செயலாளர் ரூபன், நிர்வாகிகள் தினேஷ், ராஜவேல், தவசிமுத்து, காளிமுத்து, வர்க்கீஸ், வேல்முருகன், அமானுல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்று, தூத்துக்குடி மேற்கு மாவட்ட மாணவரணி மற்றும் கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் செய்துங்கநல்லூரில் தவெகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில், மாவட்ட மாணவரணி செயலாளர் ஈஷா மாரீஸ்வரன், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சேர்மன்ராஜ், ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் தில்லை சிதம்பரம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மோகன், மாணவரணி சரவணன், கிளை செயலாளர் இசக்கி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



