spot_img
11.1 C
New York
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) சிறப்பு முகாம் நாசரேத் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமறையூர் மற்றும் திரவியபுரத்தில் 7 நாட்கள் நடைபெற்றது.

இம்முகாமில் திருமறையூரில் உள்ள முதியோர் இல்லம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி வளாகம் மற்றும் திரவியபுரம் ஆலய வளாகம், தெருப்பகுதிகள் சுத்திகரிக்கப்பட்டது.

இப் முகாமில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை பாக்கியவதியும், பனை ஓலை கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை டயானாவும் இப் பகுதி மக்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்தனர்.

தொடர்ந்து உலக நதிகள் தினத்தை முன்னிட்டு
நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் குரங்கணியில் உள்ள தாமிரபரணி ஆற்றுபடுக்கையோரங்களிலும், புன்னையடி வனத்துறை அலுவலக வளாகம், குதிரை மொழி தேரி சாலை ஓரங்கள் மற்றும் சுணைப் பகுதிகளிலும் உள்ள பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் முதலியவற்றை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநர் ஜான் சாமுவேல், மர்காஷிஸ் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் மற்றும் வனக்காப்பாளர் அஜய் ஆகியோர் முன்னிலையில் அப்புறப்படுத்தினர்.

பின்னர் தேசிய குடும்ப தினம் மற்றும் உலக முதியோர் தினம் அனுசரிக்கப்பட்டது.

நாசரேத் பேருந்து நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு, நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் தலைமையாசிரியர் ஜெபசிங் கால்டுவெல் மற்றும் குருவானவர் ஜான் சாமுவேல் முன்னிலையில் நடைபெற்றது.

நாசரேத் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் சுத்திகரிக்கப்பட்டது. மேலும் பயணிகளுக்கு டிஜிட்டல் மற்றும் நிதி மோசடிகள் பற்றியும், மனவளம் காப்பு பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாசரேத் ரயில் நிலைய கண்காணிப்பாளர் சுபக்குமார் முன்னிலை வகித்தார்.

நாசரேத் திரவியபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பரி. லூக்கா மருத்துவமனை மருத்துவர்கள் ஜெனி, சுவாதி ஆகியோர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பரி லூக்கா நர்சிங் கல்லூரி முதல்வர் சோபியா மூலம் காச நோய் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

நிறைவாக பரிசளிப்பு விழாவில் தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் தலைமை உரையாற்றினார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் ஜான் சாமுவேல், வகுத்தான்குப்பம் சேகர குரு லிவிங்ஸ்டன், ஜான்சேகர், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி தாளாளர் டேவின் சாலமோன், ஆர்ட் இண்டஸ்ட்ரியல் பள்ளி முன்னாள் முதல்வர் ஸ்டீபன், திரவியபுரம் ஊர் தலைவர் ஞானமலை பால்துரை, நாசரேத் பேரூராட்சி ஊழியர் ஞானராஜ் பேசினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் என்.எஸ்.எஸ். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நகைச்சுவை நாவலர் டாக்டர் இராமபூதத்தான் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஊர் மக்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல், நன்றி கூறினார்.

இப் முகாமினை தூத்துக்குடி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் டாக்டர் செல்வம் பார்வையிட்டு மாணவர்களின் சேவைகளை பாராட்டினார்.
இம் முகாமிற்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர் தலைமையாசிரியர் ஜெபசிங் கால்டுவெல் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல், ரீபைனர் மேஷாக் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்