அதிசயபுரம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழாவில் . தூய மிக்கேல் அதி தூதர் மற்றும் அன்னையின் திருத்தேர் பவனிநடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள அதிசயபுரம் வான் படை தளபதி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றைய தினம் மாலை 6:30 மணிக்கு ஜெபமாலை, கொடிபவனி அதனைத் தொடர்ந்து கூட்டப்பனை பங்குத்தந்தை ராஜா ரொட்ரிக் தலைமையில் திருக் கொடியேற்றம் , திருப்பலி நடைபெற்றது. அழகப்பபுரம் உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு மறைவுரை வழங்கினார்.
விழாவிற்கு உவரி உயர் திருத்தல அதிபர் ராஜன், கூடுதாழை பங்குத்தந்தை பென்சிகர், உவரி உதவி பங்குத்தந்தை மைக்கிள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். திருவிழா 29 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.
திருவிழா காலங்களில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல ஜெப ஆராதனைகள் நடைபெற்றது. ஒன்பதாம் நாளானநேற்று முன்தினம் 28ஆம் தேதி காலை 7 மணிக்கு நாகர்கோவில் அருள் தந்தை அருள் ஜோசப் தலைமையில் திருப்பலி, தெற்கு கள்ளிக்குளம் தந்தை அருள் தந்தை ஜென்னிஸ் மறையுறை வழங்குகினார்..
உவரி அருள் தந்தை மரிய ஜான் தலைமையில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை நற்கருணை பவனி நடைபெற்றது. பூச்சிகாடு பங்குச்தந்தை ஜார்ஜ் ஆலியன் மறையுறை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு பெரியதாழை பங்கு தந்தை சுகேஷ் சந்தியா, ஆரல்வாய்மொழி அருள் தந்தை ஆன்டனி சூசை, அருள் தந்தை கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரவு 10 மணிக்கு தூய மிக்கேல் அதி தூதர் மற்றும் அன்னையின் திருத்தேர் பவனி நடைபெற்றது.
பத்தாம் நாளான நேற்று 29ஆம் தேதி சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ராயர் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. மன்னார்புரம் குடும்ப நல பணியக இயக்குனர் ரியோசில் பெப்பி மறையுறை வழங்கினார்.. மண்ணின் மைந்தர் அருள் தந்தை கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
மாலை 6:00 மணிக்கு தூய மிக்கேல் அதிதூதர் மற்றும் அன்னையின் திருத்தேர்பவனி நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு ஜெபமாலை கொடி இறக்கம் நன்றியுரை, நற்கருணை ஆசீர் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ளது.
நிறைவு நாளான இன்று 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை நன்றி திருப்பலி, 6.15 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அன்றோரெவின் மற்றும் ஆலய நிர்வாகிகள், இறை மக்கள் செய்துள்ளனர்.


