ஆழ்வார்திருநகரி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சுமார் 130 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஆழ்வை யூனியன் ஆபிஸ் வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு பி. டி. ஓ., ராஜா தலைமை வகித்தார். ஆழ்வை வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா(பொறுப்பு), ஆழ்வை வட்டார ஒருங்கிணைப்பாளர் எக்கோலியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆழ்வை வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
இவ்விழாவில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி அசத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், தைரியமானவர்களாக இருக்க வேண்டும், எதையும் எதிர்கொள்ளும் மனதிடத்துடன் இருக்கவேண்டும் என்றார்.
இதுபோன்று கருங்குளம், திருவைகுண்டம் வட்டாரத்திலும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
இவ்விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆழ்வார்விஜய், மங்கலகுறிச்சி சிவசாமி வேலுமணி, திருவைகுண்டம் ஒன்றிய பொறுப்பாளர் கணேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேலு, நகர செயலாளர் அம்மமுத்து செல்வம், நிர்வாகிகள் வக்கீல் சங்கரலிங்கம், சிவராமலிங்கம்,
ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாண்டித்துரை, அருள், பாலமுருகன், நகர செயலாளர்கள் சரவணன், ஏரல் பவன்டோராஜா, சுதர்சன், நிர்வாகிகள் வாசு, காளியப்பன், ஜெபஸ்டின், பால்கிளி ராஜா, தினேஷ், தவசிகுமார், ராஜவேலு, முத்துக்குமார் மற்றும் வேல்முருகன், தனராஜ், அமானுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


