தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தின் வட்ட மாநாடு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு வட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கார்த்திக், மாவட்ட துணைத் தலைவர் சற்குணம் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் சரத்குமார் வரவேற்பு உரை ஆற்றினார்.
மாவட்டத் தலைவர் குமாரலிங்கம் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
மாநாட்டில் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், தூத்துக்குடி வட்டத் தலைவர் அருண்குமார் மற்றும் மகாராஜா, சோமசுந்தரம், பேச்சிமுத்து, வேல்மயில், கார்த்தீஸ், அனந்தபத்மநாபன், ராஜா சூசையம்மாள், தாமரைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


