நாசரேத் ஜெயராஜ் அ ன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் டாக்டர் அகர்வால் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஊழியர்கள் கண் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இம் முகாமில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர் உட்பட சுமார் 171 பேருக்கு இலவசமாக கண்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது.
இம் முகாம் ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான ஐடியல் தொழிலதிபர் அருள் ராஜா தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜோசப் பர்னபாஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


