நாசரேத் நூலகத்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார்.
நிகழ்வில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியப் பெருமக்கள் எஸ்தர் மெர்சி, கோகிலா தங்கம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். ஆய்வரங்கு நிகழ்வில் தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபனின் தேரிப்பிச்சி நாவல் குறித்து பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் செயலாளர் காசி ஆறுமுகம், தொழிற்சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.

தத்துவ எழுத்தாளர் மணிமொழிச் செல்வன், ஆசுகவி சிவா ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஒய்வு பெற்ற பேராசிரியர் காசிராசன் நிறைவுரையாற்றினார்.
இதில் இயற்கை மருத்துவர் விஜய் ஆனந்த், கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன், ஆசிரியர் செல்வின், ஜான்பிரிட்டோ, செல்லப்பாண்டியன், மந்திரம், மனோகரன், விவேகானந்தன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.


