spot_img
11.1 C
New York
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

நாசரேத்தில் கேவிகே சாமி 70வது நினைவு நாள் அனுசரிப்பு

நாசரேத் மதிமுக சார்பில் நடைபெற்ற கேவிகே_சாமி 70வது நினைவு நாள் அனுசரிப்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ரஞ்சன் பங்குபெற்றார்.

தென் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் முக்கிய முன்னோடியாகவும் விளங்கிய மறைந்த கே.வி.கே. சாமியின் 70 வது நினைவு நாள் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது.

நாசரேத் மதிமுக சார்பில் நடைபெற்ற கேவிகே_சாமி 70வது நினைவு நாளன்று ஆழ்வை ஒன்றியம் மற்றும் நாசரேத்து நகர மதிமுக சார்பில் கேவிகே சாமி திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலர் ரஞ்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில்,
ஆழ்வை ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி அரிகரன், மதிமுக பொதுக் குழு உறுப்பினர் மோகன்சிங், ஆழ்வை ஒன்றிய துணைச் செயலர் மாசில்லாமணி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் நாசரேத்து மணிநகர் மனோகரன், நல்லதம்பி, நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்