spot_img
11.1 C
New York
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரவணன் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையை நம்பி கருங்குளம், தாதன்குளம், அரசகுளம் என ஏராளமான கிராம மக்கள் உள்ளனர்.

இந்த மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி.சரவணன் இன்று(21ம் தேதி) திடீர்னு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் மருத்துவ பணிகளை முறையாக மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முன்னதாக சரவணன் எம்எல்ஏ கருங்குளம் ஆறாம்பன்னை மும்முனை ரோடு சந்திப்பு சாலையில் ரவுண்டானா அமைப்பது குறித்து ஆறாம் பண்ணை மக்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆழ்வார்விஜய், மாவட்ட மாணவரணி செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் வெள்ளத்துரை, கருங்குளம் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, கால்வாய் கிளை செயலாளர் தளவாய், நிர்வாகிகள் வேல்முருகன், அமானுல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்