spot_img
11.1 C
New York
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

திருவைகுண்டம் மதுபான கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் புதுக்குடியில் திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து பசும்பொன் ரத்த தான கழக நிறுவனர் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து திருவைகுண்டம் வட்டாட்சியர் தாஹுர் அகமது விடம் கோரிக்கை விண்ணப்பத்தினை கொடுத்தனர்.

இக்கோரிக்கையை நிறைவேற்ற விடில் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இம்மது கடையில் மது வாங்கி குடித்துவிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த இரண்டு நபர்கள் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததையும் சுட்டி காட்டினர்.

கோரிக்கை விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்