spot_img
11.1 C
New York
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

ஸ்ரீவை டெப்போவில் அதிமுக தொடக்கவிழா கொண்டாட்டம்.!

ஸ்ரீவைகுண்டம் டெப்போவில் அண்ணா தொழிற்சங்க கொடியேற்று விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி உத்தரவின்பேரில் அதிமுகவின் 55வது ஆண்டு தொடக்க விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். பி.சண்முகநாதன் ஆலோசனைப்படி ஸ்ரீவைகுண்டம் டெப்போவில் அதிமுகவின் 55வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவினை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்க மண்டல துணைத் தலைவர் பார்வதி தொழிற்சங்க கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் தொழிற்சங்க உறுப்பினர்கள் திருப்பதி, சங்கர நாராயணன், மகாராஜன், அருணாச்சலம், ஞானமூர்த்தி, சுந்தர்ராஜ், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்