spot_img
11.1 C
New York
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

நாசரேத்தில் உலக வன விலங்குகள் தினம்

நாசரேத்தில் ஜெயராஜ் அ ன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டத்தின் மூலம் உலக வன விலங்குகள் தினம் நிகழ்வு கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்று சூழல் கரிசனை துறை இயக்குநர் அருள்திரு ஜான் சாமுவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் பணிபுரியும் மென்பொருள் நிறுவன பொறியாளர். கிங்ஸ்டன் கலந்து கொண்டார்.

திருச்செந்தூர் வனசரக அலுவலர் அஜய் வன விலங்குகள் தினம் பற்றிய விளக்கவுரை நிகழ்த்தினார். திருச்செந்தூர் வனசரக ரேஞ்சர் சிவகுமார் வன விலங்குகள் பாதுகாப்பு பற்றிய விளக்கவுரை நிகழ்த்தினார்.

இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ/ மாணவியர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான அருள் ராஜா தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜோசப் பர்னபாஸ் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட செய்து மாணவர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்