நாசரேத் அருகே உள்ள எழுவரைமுக்கியை சேர்ந்தவர் ரத்தினராஜ். அவரது மனைவி கன்னிமரியாள் (வயது 41). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பையன்கள் உள்ளனர் இருவரும் வெளியூரில் கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கின்றனர்.

கன்னிமரியாளுக்கு வயிற்றில் உள்ள ஒரு கட்டி சம்பந்தமாக நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர்களின் பரிசோதனைக்கு பின் 8ஆம் தேதி கன்னிமரியாளுக்கு வயிற்றில் உள்ள கட்டியை ஆபரேஷன் செய்து ஆபரேஷன் செய்து எடுத்துள்ளனர். பின்னர் 10ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 11ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து புகாரின் பெரில் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் திருச்செந்தூர் – விடுதலைச் செழியன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் – திருமாசுரேந்தர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கன்னிமரியாளின் உறவினர்கள் மற்றும் எழுவரைமுக்கி ஊர் பொதுமக்கள் கன்னிமரியாளின் சாவுக்கு நீதி வேண்டி நாசரேத் சந்தி பஜாரில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலை மறியல் செய்தனர்

இதனால் சாத்தான்குளம் மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் இசக்கி துறை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் நாசரேத் சந்தி பஜாரில் சுமார் 1 மணி நேரம் நீடித்தது


