spot_img
11.1 C
New York
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம்  பொறியியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் CSI பொறியியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் , மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் இடையே பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

மேலும், கல்லூரி மாணவர்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவது பற்றி விளக்கமாக எடுத்துரைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் மாமல்லன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஏரல் வட்டாட்சியர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தாமரை, சிவராமன் கிராம உதவியாளர் சத்தியசீலன், துறை தலைவர் ஜெனிபர் ஜான், கல்லூரி பேராசிரியர்கள் ஸ்டான்லி ஜான்சன், செல்வன் தேவதாஸ் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட பேராசிரியர் ஞான செல்வன் அவர்கள் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்