spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியில்சுதந்திர தின விழா

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி அமைப்பியல் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல் பாடினர். முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய மூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை தலைவர் ஜான் வெஸ்லி உறுதி மொழி வாசித்தார். மாணவி புசரா பீவி தேசப்பற்று பற்றி பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் மாவட்ட அளவில் நடைபெற்ற டிஎம்ஆர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கல்லூரி ஆண்கள் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஜான் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். நிறைவாக இயந்திரவியல் துறை தலைவர் பிரபாகர் வேத சிரோன்மணி நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான தொழிலதிபர் அருள் ராஜா தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜோசப் பர்னபாஸ் ஆகியோர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்