திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் திருக்கோவிலின் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோவிலின் ஆவணி திருவிழா 20.08.2026 வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிகர நாளான இன்று தேரோட்டம் நடந்தது. அருள்மிகு வெயிலுகந்தம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு பெரு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேரோட்டத்தினை உதவி ஆணையர் லோகநாதன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பக்தர்கள் வடம் பிடித்து தேரினை இழுக்க தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


